நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:கெங்கவல்லி, புதுக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, 50. இவரது தோட்ட வேலி பகுதியில், நேற்று காலை, மலைப்பாம்பு இருந்தது. சுப்ரமணி தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, 7 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் கெங்கவல்லி, செந்தாரப்பட்டியை சேர்ந்த சக்தி, 40, வீட்டில் இருந்த, 6 அடி நீள சாரை பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.