ADDED : மே 11, 2026 03:18 AM

தலைவாசல்: தலைவாசல், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளி, 2025 - -26ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றது. அதில் அக்-ஷிதா, திலிப்குமார், அம்-சவதினி ஆகியோர் தலா, 590 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அனிஷ்கா, 589 மதிப்பெண் பெற்று, 2ம் இடம் பிடித்தார். திலகா, ஜோதிகாஸ்ரீ ஆகியோர், தலா, 588 மதிப்-பெண்கள் பெற்று, 3ம் இடங்களை பிடித்தனர்.
இவர்களை, பள்ளி தலைவர் லஷ்மிநாராயணன், செயலர் செல்-வராஜீ, பொருளாளர் பிரபா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். இதில் கல்வி குழு ஆலோசகர்கள் இளையப்பன், பழனிவேல் மற்றும் ராஜா, ராஜேஸ்வரி இயக்குனர்கள், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.தமிழில், 2 பேர், ஆங்கிலத்தில் ஒருவர் உள்பட, பல்வேறு பாடங்களில், 30 மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண் பெற்-றனர். பிளஸ் 2 படித்த, 325 பேரில், 550 மதிப்பெண்களுக்கு மேல், 79 மாணவர்கள், 500க்கு மேல், 145 மாணவர்கள், 400க்கு மேல், 300 மாணவர்கள் பெற்றுள்ளனர். பொதுத்தேர்வில் பள்ளி சராசரி மதிப்பெண், 488 ஆக உள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், பாடுபட்ட ஆசிரியர்களை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
