/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம்
/
அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம்
ADDED : நவ 19, 2024 05:12 AM
ஆத்துார்: ஆத்துார், புதுப்பேட்டை வழியாக செல்லும் ஆத்துார்-பெரம்-பலுார் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சேலம்-விருத்தாச்சலம் அகல ரயில் பாதை செல்கிறது. இங்குள்ள ரயில்வே கேட் வழி-யாக நேற்று மதியம், 3:30 மணியளவில் இறந்தவரது உடலுடன் அமரர் ஊர்தி வந்துள்ளது. அப்போது, விருத்தாச்சலத்தில் இருந்து, சேலம் நோக்கி பயணிகள் ரயில் வந்ததால், ரயில்வே பணியா-ளர்கள் கேட் போட்டுள்ளனர்.
அவ்வழியாக வந்த அமரர் ஊர்தி வாகனம், ஒரு பகுதியில் உள்ள கேட் மீது மோதியதில் உடைந்து, சேதமடைந்தது. சேதமடைந்த ரயில்வே கேட்டை சரி செய்யும் பணிகளில், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, ரயில்வே அலுவலர்கள் கூறுகையில், 'பயணிகள் ரயில் வரும்-போது, கேட் போடப்பட்ட நேரத்தில் வந்த வாகனம், கேட் மீது மோதியதில் சேதமடைந்துள்ளது. இந்த சேதம் ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை செய்து வருகிறோம்,' என்றனர்.

