ADDED : ஆக 12, 2026 05:32 AM
சேலம்:சேலத்தில்
நேற்று இரவு, 7:00 மணிக்கு தொடங்கிய கனமழை, ஒரு மணி நேரம் வரை பரவலாக
கொட்டித்தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர்
பெருக்கெடுத்து ஓடியது. சேலம் புது பஸ் ஸ்டாண்ட், சாரதா கல்லுாரி சாலை,
சோனா கல்லுாரி சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளில், 2 அடிக்கு மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
வாகன ஓட்டிகள், பாதசாரிகள்,
பயணியர் அவதிக்குள்ளாகினர். தாழ்வான பகுதிகளில்
குடியிருப்புகளுக்குள் சாக்கடை கலந்த மழைநீர் புகுந்ததால் பெரும்
அவதிப்பட்டு வெளியேற்றினர்.
விவசாயிகள் நிம்மதி
பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரம் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று இரவும் மழை பெய்தது.
தொடர்ந்து
மின் தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இருப்பினும்
இரு நாளாக மழையால், வயலில் தண்ணீர் தேங்கியது. இது வாடிய பயிர்களுக்கு
ஊக்கம் அளிக்கும் விதமாக இருந்ததால், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
தாரமங்கலத்தில் நேற்று மாலை, 6:30 மணிக்கு மழை பெய்ய தொடங்கி, 45 நிமிடம் கொட்டியது.
இதனால் சில நாட்களாக வெயில் தாக்கத்தில் சிரமப்பட்ட மக்கள், மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று இரவு, 8:00 மணிக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இரவு, 10:30 மணி வரை பெய்தது. இருப்பினும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
