ADDED : மே 25, 2026 05:39 AM

ஆத்துார்: ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை, சூறாவளி காற்-றுடன் கனமழை பெய்தது. இதில் தலைவாசல், காட்டுக்கோட்டை, மணிவிழுந்தான், ஆணை-யாம்பட்டி, தெடாவூர், வீரகனுார், ராயர்பா-ளையம் உள்ளிட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், மரங்கள் சாய்ந்தன. குறிப்பாக சாலை, மின் கம்பங்கள் மீது விழுந்ததால், போக்-குவரத்து மற்றும் மின்தடை பாதிப்பு ஏற்பட்டது.
இதில், ஆணையாம்பட்டி, அம்பேத்கர் நகரில், பெருமாள், 72, என்பவரது, அட்டை வீடு மீது புளிய மரம் விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். சாலை பகுதிகளில் விழுந்த மரங்களை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு, 7:00 மணிக்கு மேல், மின் வினியோகம் வழங்கப்பட்-டது.அதேபோல் வாழப்பாடி, காரிப்பட்டி, சிங்கி-புரம், ஏத்தாப்பூர், பெரிய கிருஷ்ணாபுரம், பெத்-தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கு மேல் மித-மான மழை பெய்தது.சேலம் அருகே பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் நேற்று மாலை சூறைக்காற்று வீசியது. சாரல் மழை தொடங்கியதும் மின் தடை ஏற்பட்டது. காற்று, இடி, மின்னலுடன் அரை மணி நேரம் மழை பெய்தது. இரவு, 7:45 மணிக்கு மின் வினி-யோகம் வழங்கப்பட்டது.
