ADDED : ஆக 06, 2026 01:13 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் சராசரி மழை அளவு, 1,004.4 மி.மீ., ஆக உள்ளது. அதன்படி கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை, 353.2 மி.மீ., பதிவாகி இருக்க வேண்டும். ஆனால், 254.7 மி.மீ., மட்டும் பெய்துள்ளது. இதன்படி, 98.5 மி.மீ., மழை குறைந்து-விட்டது.
மாத வாரியாக சராசரி மழை அளவு, அடைப்புக்குறியில் பதி-வான மழை அளவு விபரம் வருமாறு: ஜனவரி, 13.8(7.3); பிப்ர-வரி, 3.8(0); மார்ச், 21(49.5); ஏப்ரல், 49.9(17.3); மே, 109.7(98.9); ஜூன், 68.1(71.4); ஜூலை, 86.9(10.3) - 76.6 மி.மீ.,இதில் பிப்ரவரியில் மழை அறவே இல்லை. ஜனவரி, ஏப்ரல், மே மாதங்களில் சராசரியை விட குறைந்துள்ளது. அது ஜூலையில் வெகுவாக சரிந்துவிட்டது. நடப்பாண்டில் பருவ-நிலை மாற்றம், எல் நினோ பாதிப்பே மழை குறைய காரணம் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த, 2021ல், 1,327.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. 2022ல், 1,203.6 மி.மீ.,; ஆனால், 2023ல், 887.2 மி.மீ., 2024ல், 1,154.9 மி.மீ., 2025ல், 829.1 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில், 2023, 2025ல் மழை குறைய காரணம், மரங்கள் அதிக அளவில் வெட்-டப்பட்டு, விளை நிலங்கள் அதிக அளவில், வீட்டுமனைகளாக மாற்றப்பட்டதே. அத்துடன் கனிமவள கொள்ளையும் ஒரு காரணம்.
வரும் செப்டம்பர் முடிய நீடிக்க வேண்டிய தென்மேற்கு பருவ-மழை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்ய வேண்-டிய வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் மட்டுமே, சேலம் மாவட்டத்தில் சராசரி மழை கூட கிடைக்கும். இல்லை எனில் அடுத்தாண்டில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்றனர்.
