ADDED : அக் 18, 2026 06:03 AM
சேலம்:தமிழகத்தில்
வடகிழக்கு பருவ மழை கடந்த, 15ல் தொடங்கியது. இதனால் சேலம்
மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
அதிலும்
நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரையான, 24
மணி நேரத்தில், அதிகபட்சமாக தம்மம்பட்டியில், 54 மி.மீ., மழை
பதிவானது.அதேபோல் கரியகோவில் அணை, 50 மி.மீ., புழுதிக்குட்டை,
ஆணைமடுவு அணை, 47, வாழப்பாடி, 36.2, டேனிஷ்பேட்டை, 36, வீரகனுார், 31,
மேட்டூர், 25.2, சேலம் நகர், 22.7, கெங்கவல்லி, 18, ஏற்காடு, 11,
ஆத்துார், 10.4, ஓமலுார், 6, நத்தக்கரை, 5 மி.மீ., மழை பெய்துள்ளது.
அதேபோல்
நேற்று இரவு, 7:30 மணிக்கு, வாழப்பாடி, முத்தம்பட்டி, சிங்கிபுரம்,
பெரிய கிருஷ்ணாபுரம், ஏத்தாப்பூர், துக்கியாம்பாளையம்,
பழனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து,
குளிர்ந்த சூழல் நிலவியது.
