/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சொத்து வரி நிர்ணயிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் சேலம் மாநகராட்சி வசூல் 'ராஜா' கைது

ADDED : அக் 29, 2024 07:20 AM
சேலம்: சொத்து வரி குறைவாக நிர்ணயிக்க, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, சேலம் மாநகராட்சி பில் கலெக்டரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சேலம், அழகாபுரம் மிட்டாபுதுார், ஆண்டிச்சி நகரை சேர்ந்தவர் ஷாஜூ, 32. இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு வரி வசூலிக்க, சேலம் மாநகராட்சி ஐந்தாவது வார்டில், பில் கலெக்டராக பணிபுரியும்
கிச்சிபாளையத்தை சேர்ந்த ராஜா, 45, சென்றுள்ளார். அப்போது சொத்து வரி நிர்ண-யிக்கும் போது, வரியை குறைவாக விதிப்பதாகவும், அதற்கு, 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறும் கேட்டுள்ளார். இதில் பேரம் பேசி, 30 ஆயிரம்
தந்தால் பணியை முடித்து கொடுப்பதாக உறுதி-யளித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஷாஜூ, லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். நேற்று காலை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன்
தலைமையில், ரசாயன பவுடர் தடவிய, 30 ஆயிரம் ரூபாயை ஷாஜூ, அஸ்தம்-பட்டி மண்டல அலுவலகம் சென்று, பில் கலெக்டர் ராஜாவிடம் வழங்கினார்.அப்போது அலுவலகத்தில், சாதாரண உடையில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கையும் களவுமாக ராஜாவை பிடித்தனர். அவர் இருந்த அறை மற்றும் அவரது பைக் முழு-வதும் சோதனை நடத்தப்பட்டது. பின்
அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.