/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமைச்சரானார் ராஜேந்திரன் சேலம் தி.மு.க.,வினர் மகிழ்ச்சி
/
அமைச்சரானார் ராஜேந்திரன் சேலம் தி.மு.க.,வினர் மகிழ்ச்சி
அமைச்சரானார் ராஜேந்திரன் சேலம் தி.மு.க.,வினர் மகிழ்ச்சி
அமைச்சரானார் ராஜேந்திரன் சேலம் தி.மு.க.,வினர் மகிழ்ச்சி
ADDED : செப் 29, 2024 01:01 AM
அமைச்சரானார் ராஜேந்திரன்
சேலம் தி.மு.க.,வினர் மகிழ்ச்சி
சேலம், செப். 29-
எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அமைச்சரானதால், சேலம் மாவட்ட, தி.மு.க.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்ட தி.மு.க.,வின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர், வீரபாண்டி ஆறுமுகம். இவர், 2011 தி.மு.க., ஆட்சியின்போது, சேலம் மாவட்டத்தில் அமைச்சராக பதவி வகித்தார். அதற்கு பின், 10 ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. இந்த ஆட்சி அமையும் முன்பே, தேர்தல் நேரத்தில் சேலம் மத்திய மாவட்ட, தி.மு.க. செயலர், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. ஆனால் ஆட்சி அமைந்த பின், அமைச்சரவையில் அவரது பெயர் இல்லை. இதனால் சேலத்துக்கு பொறுப்பு அமைச்சராக சிறிது காலம் செந்தில்பாலாஜி இருந்தார். தற்போது அமைச்சர் நேரு உள்ளார். ஒவ்வொருமுறை அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சு வரும்போது, ராஜேந்திரன் பெயர் அடிபட்டது. அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் அமைச்சராக, ராஜேந்திரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் அமைச்சராகி, சேலம் மாவட்டத்துக்கு வரும்போது, சிறப்பான வரவேற்பு அளிக்க, ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர். இந்த அறிவிப்பு, ஆதரவாளர்கள் மட்டுமின்றி, சேலம் மாவட்ட தி.மு.க.,வினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.