தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாட்டிகள் வரை பாலியல் பலாத்காரம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் சாடல்

பாட்டிகள் வரை பாலியல் பலாத்காரம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் சாடல்

பாட்டிகள் வரை பாலியல் பலாத்காரம் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் சாடல்


ADDED : மார் 18, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொ-டுமை, சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்-பாட்டம் நேற்று நடந்தது. புறநகர் செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

அமைப்பு செயலர் செம்மலை பேசியதாவது:

போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி, குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி வருகின்-றனர். சிலர் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கெல்லாம் ஸ்டாலின் கவலைப்படுவதாக தெரியவில்லை. கூட்டணி கட்சி-களை பாதுகாப்பதும், குடும்ப ஆட்சியை நடத்தி, வாரிசு அரசி-யலை செயல்படுத்துவதிலும் தான் கவனம் செலுத்துகிறார். போலீஸ் பெண் அதிகாரிகளுக்கே பாலியல் கொடுமை நடக்கி-றது. இந்த அவலநிலை மாற, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவ-சியம்.இவ்வாறு அவர் பேசினார்.

அமைப்பு செயலர் சந்திரசேகரன், மாநகர் செயலர் பாலு, கொள்கை பரப்பு துணை செயலர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ.,க்கள் பாலசுப்ரமணியம், மணி, ராஜமுத்து, ஜெயசங்-கரன், நல்லதம்பி, பா.ம.க.,வின் சதாசிவம், பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத் உள்பட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us