ADDED : ஜூன் 06, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, சங்ககிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், சங்ககிரி நகராட்சி அக்கமாபேட்டையில், புதிதாக ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது. அந்த கடையை, அ.தி.மு.க.,வின், சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன் நேற்று திறந்து வைத்து, மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து அங்குள்ள முருகன் கோவிலில், எம்.எல்.ஏ., வழிபட்டார். சேலம் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலர் சிவகுமாரன், அம்மா பேரவை சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலர் கருப்புசாமி, சங்ககிரி நகர செயலர் சங்கர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.