ADDED : நவ 12, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் அருகே சிக்கம்பட்டி ஊராட்சி கரட்டுக்கொறையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, எம்.பி., தம்பிதுரை தொகுதி மேம்பாட்டு நிதியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டப்பட்டது. அந்த கடையை, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி, நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து மக்களுக்கு, ரேஷன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். ஓமலுார் ஒன்றிய செயலர் செந்தில்குமார், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

