ADDED : மார் 15, 2026 08:07 AM
இடைப்பாடி:நாமக்கல்
எம்.பி., மேம்பாட்டு நிதியில், சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில், 6 லட்சம்
ரூபாய் மதிப்பில் உயர்கோபுர மின்வி-ளக்கு; சங்ககிரி நகராட்சி
ஆணைக்கல்பாளையத்தில் 15.30 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை கட்டப்பட்டது.
தொடர்ந்து நேற்று, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், சேலம் எம்.பி.,
செல்வகணபதி ஆகியோர், மின்விளக்கை இயக்கி வைத்து ரேஷன் கடையை திறந்து வைத்தனர். தி.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார், நகர செயலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல்
கொங்கணாபுரம், எருமைப்பட்டியில், 12.71 லட்சம் ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்ட ரேஷன் கடை; தங்காயூரில், 13.10 லட்சம் ரூபாய் மதிப்பில்
கட்டப்பட்ட ரேஷன் கடையையும், எம்.பி., செல்வகணபதி திறந்து வைத்தார்.
ஒன்றிய செயலர் பரம-சிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
