/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆவினில் தொகுப்பூதியத்தில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் நியமனம்:வரும் 14ல் நேர்காணல்

ADDED : அக் 06, 2025 04:37 AM
சேலம்: சேலம் ஆவினில், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படவுள்ள டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடத்திற்கு வரும், 14ல் நேர்காணல் நடைபெறுகிறது.
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் ஆவினில் தேசிய பால்வள வாரியத்தின், 100 சதவீத மானியத்தில், மத்திய அரசின் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் ஜெர்சி கலப்பின பசுக்களில் வம்சாவழி சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31ல் முடிவடைகிறது. இத்திட்டத்தில் ஆப்பரேட்டரை நியமித்து கொள்ளவும், மாதம் ரூ. 25 ஆயிரம் வீதம் மத்திய அரசு நிதியில் இருந்து செலவினம் மேற்கொள்ளவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனவே டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணிக்கு, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களில் ஒருவரை, தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து சேலம் துணை பதிவாளர் அனுமதி பெற்று அயற்பணி அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர்.
இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, தட்டச்சு, INAPH/Bharat Pashudhan செயலியை கையாளும் அனுபவம் கணினி பயன்பாடு குறித்து வரும், 14 காலை 11:00 மணிக்கு சேலம் பால் பண்ணை வளாக பயிற்சி நிலையத்தில் நடக்கும் நேர்முக தேர்வில் தகுந்த ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.