ADDED : ஜன 06, 2025 02:31 AM
வீரபாண்டி: சேலம், வேடுகத்தாம்பட்டியில் தொடங்கி, புது ரோடு, செம்மண் திட்டு, பீயமரம், நல்லாம்பட்டி, நாய்க்கன்பட்டி, சித்தர்-கோவில் வரை, கஞ்சமலையையொட்டி ஆண்டுதோறும், 100 ஏக்கரில் செங்கரும்புகள் பயிரிட்டு வந்தனர். வேலை ஆட்கள், தண்ணீர் பற்றாக்குறை, பருவ மழை பொய்த்தது, போதிய விலை கிடைக்காததால், ஆண்டுதோறும் கரும்பு பயிர் சாகுபடி குறைந்து தற்போது, 25 ஏக்கருக்கும் குறைவாகவே பயிரிடப்பட்டு வருகின்-றன.
நடப்பு பருவத்தில் நல்ல மழை பெய்துள்ளதால், அப்பகுதி-களில் நடவு செய்த செங்கரும்புகள் நன்றாக செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. வரும், 10ல் வைகுண்ட வாசல் திறப்பு, 13ல் ஆருத்ரா தரிசனம், போகி, 14ல் பொங்கல் என வரி-சையாக பண்டிகைகள் வருகின்றன. இதனால் விரைவில், அப்ப-குதிகளில் கரும்பு வெட்டும் பணி சுறுசுறுப்பாக நடக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர். ஜோடி செங்கரும்பு விலை, 80 முதல், 100 வரை விலை போகும் என, எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.கரும்பு கட்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் கரும்பு வழங்கப்படுகிறது. அதற்கு பூலாம்-பட்டி, கூடக்கல், குப்பனுார், சிலுவம்பாளையம் உள்ளிட்ட பகு-திகளில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் ரேஷன் கடைகளுக்கு கரும்புகளை அனுப்ப, பூலாம்பட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று ஏராளமான விவசாயிகள், கரும்-புகளை வெட்டி, 20 கரும்புகள் கொண்ட கட்டாக கட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த கரும்புகளை, இன்று அரசு அதிகா-ரிகள் பார்வையிட்ட பின், லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.