/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உடல் பருமனை குறைத்தால் பக்கவாதத்தை தடுக்கலாம்
/
உடல் பருமனை குறைத்தால் பக்கவாதத்தை தடுக்கலாம்
ADDED : அக் 30, 2024 01:34 AM
உடல் பருமனை குறைத்தால்
பக்கவாதத்தை தடுக்கலாம்
சேலம், அக். 30-
சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. டீன் தேவிமீனாள் தலைமை வகித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: பக்கவாதம் வராமல் தடுக்க, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். உடற்பயிற்சி செய்வதோடு உடல் பருமனை குறைத்தால் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். அதிக மது அருந்துதல், புகை பிடித்தல், பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணி. பக்கவாதம், மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு அல்லது வெடிப்பை ஏற்படுத்தும். அதனால் கை, கால் செயலிழப்பு, பார்வை, ஞாபக சக்தி குறைபாடு போன்ற பாதிப்புகள் வரும். அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். நாலரை மணி நேரத்துக்குள் சிகிச்சை பெற்றால் குணப்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்பட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர்.