sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'கொலைகாரன்' என கூறியதால் மூதாட்டியை கொன்ற உறவினர் கைது

/

'கொலைகாரன்' என கூறியதால் மூதாட்டியை கொன்ற உறவினர் கைது

'கொலைகாரன்' என கூறியதால் மூதாட்டியை கொன்ற உறவினர் கைது

'கொலைகாரன்' என கூறியதால் மூதாட்டியை கொன்ற உறவினர் கைது


ADDED : ஜூன் 06, 2025 01:33 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள், 94. இவரது, 4 மகன்கள், இரு மகள்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்தனர்.

இளைய மகள் பழனியம்மாள், 65. இவரது கணவர் பிரிந்து சென்றதால், சேலத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து, தாய் வீட்டில் தங்கி வந்தார். ராஜம்மாளின் கணவரும், சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த, 3 இரவு, பணி முடிந்து, பழனியம்மாள் வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜம்மாள் இறந்து கிடந்தார். பின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, இறுதிச்சடங்கு செய்தபோது, ராஜம்மாள் பின்புற தலையில் காயம் இருந்ததை பார்த்தனர். உடனே, தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விசாரித்த போலீசார், ராஜம்மாளின் உறவினர் செல்வராஜ், 63, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

ராஜம்மாள், செல்வராஜிக்கு பெரியம்மா உறவுமுறை. கடந்த, 3ல் ராஜம்மாள், அவரது வீட்டு திண்ணையில் படுத்திருந்தார். அப்போது செல்வராஜ் வந்தார். அதற்கு, 'கொலைகாரன் இங்கு வரக்கூடாது' என, ராஜம்மாள் கூறினார்.

'போதை'யில் இருந்த செல்வராஜ் ஆத்திரமடைந்து, அங்கிருந்த கரண்டியால், ராஜம்மாள் தலையில் வெட்டியுள்ளார். அதில் ரத்தம் வழிந்துள்ளது. பின் ரத்தக்கரையை அகற்றி விட்டு, ராஜம்மாளை கட்டிலில் படுக்கவைத்து, வீட்டுக்கு சென்றுள்ளார். இதை, அவர் ஒப்புதல் வாக்குமூலமாக தந்தார்.

செல்வராஜ், 2022 ஜன., 8ல், கருக்குப்பட்டியில் குடித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், நண்பரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, கிணற்றில் வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us