ADDED : நவ 19, 2026 01:40 AM
சேலம்: சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட, வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு பணியில், 50க்கும் மேற்பட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள மாநகர போலீசார் ஈடுபடுவர்.
அவர்களுக்கு சேலம் மாநகர போலீசார் சார்பில், அன்னதானப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று, பிஸ்டல், ரிவால்வர், ஏ.கே.47, இன்சாஸ் உள்ளிட்ட அனைத்து வகை துப்பாக்கிகளை கையாள நினைவூட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.துப்பாக்கி வகை, அவை செயல்படும் விதம், எந்த வகை துப்பாக்கியால் எவ்வளவு துாரம் சுட முடியும், அவற்றை பாரமரிக்கும் வழிமுறை, எடுத்துச்செல்லும் போது பாதுகாப்பு வழிமுறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரமலை அடிவாரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
