வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு 25க்குள் கருத்துரு அனுப்ப வேண்டுகோள்
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு 25க்குள் கருத்துரு அனுப்ப வேண்டுகோள்
ADDED : அக் 20, 2026 02:18 AM
சேலம்; சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதி-களில், 3,468 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில் ஓமலுார், 362; இடைப்பாடி, 342; சங்ககிரி,339; ஏற்-காடு, 336; மேட்டூர், 327; வீரபாண்டி, 312; சேலம் மேற்கு, 310; ஆத்துார், 306; சேலம் வடக்கு, 286; கெங்கவல்லி, 281; சேலம் தெற்கில், 268 ஓட்டுச்-சாவடிகள் இடம்
பெற்றுள்ளன.
ஓட்டுச்சாவடிகளை சீரமைத்தல், இடமாற்றம், பெயர் மாற்றம் செய்தல், புது ஓட்டுச்சாவடி உரு-வாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ள வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல், நேற்று, 11 தொகுதிகளில், தனித்தனியே வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலர் பட்டியலை வெளி-யிட்டார். அதில், 1,200 ஓட்டுகளுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, 1,200 வாக்காளர் மிகாத வண்ணம், அதை பிரித்து ஓட்டுச்சாவடி-களை சீரமைக்கும் பணி, வரும், 26 வரை மேற்-கொள்ளப்படுகிறது.
எனவே, வாக்காளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்-பட்ட அரசியல் கட்சியினர் தங்களுடைய கோரிக்கை மற்றும் கருத்துருக்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட வாக்-காளர் பதிவு அலுவலர்களிடம் வரும் 25க்குள் தெரியப்படுத்த வேண்டும். அப்பணி நிறைவு பெற்றதும்,
2027க்கான, வரைவு வாக்காளர் பட்டியல், வரும் நவ.,12ல் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
