ADDED : மே 06, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில் கடைவீதி பிரதான சாலையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. அதேபோல் ஓமலுார் டி.எஸ்.பி., அலு-வலக பின்புறம் உள்ள தெருக்களில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் செல்லாமல் ஆங்காங்கே தேக்கமடைந்துள்ளன.
சில நாட்களாக மழை பெய்து வருவதால், முன்-னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த சாக்கடை கால்வாய்களை முறையாக துார்வாரி சுத்தப்ப-டுத்த, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
