ADDED : மே 11, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
வெண்ணந்துார்:வெண்ணந்துார்
ஒன்றியம், அத்தனுார் டவுன் பஞ்., பகுதியில் காவிரி குடிநீர் வழங்கும்
முக்கிய நீராதாரமான குதிரைக்கால்மேடு பகுதியில் உள்ள பேரேஜில்
பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, வரும், 25 வரை
குடிநீர் வினியோகம் குறைவான அளவில் இருக்கும் என, பேரூராட்சி
நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே, அத்தனுார் டவுன் டஞ்.,
பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி
ஒத்துழைக்க வேண்டும் என்றும், நீர் வீணாவதை தவிர்க்க வேண்டும் என்றும்
டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
