/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செவிலியரிடம் நகை பறித்த 2 வாலிபருக்கு 'காப்பு'
/
செவிலியரிடம் நகை பறித்த 2 வாலிபருக்கு 'காப்பு'
ADDED : செப் 28, 2025 02:13 AM
மகுடஞ்சாவடி:மகுடஞ்சாவடி, எர்ணாபுரத்தை சேர்ந்த, வியாபாரி திலீப்குமார், 38. இவரது மனைவி ரம்யா, 32. இவர் இளம்பிள்ளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, ரம்யா பணி முடிந்து, டி.வி.எஸ்., ஸ்கூட்டி மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த இருவர், ரம்யா அணிந்திருந்த, 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக தப்பினர். இதுகுறித்து ரம்யா புகார்படி, மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்ததில், சேலம், ஆனந்தா பாலத்தை சேர்ந்த பாலகி ேஷார், 26, சேலம், அம்மாபேட்டை விக்னேஷ், 25, நகை பறித்தது தெரிந்தது. இருவரையும் நேற்று, போலீசார் கைது செய்தனர்.