/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபர் காதை வெட்டிய 3 பேருக்கு 'காப்பு'
/
வாலிபர் காதை வெட்டிய 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 07, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரிராம், 26. ரயில்வே லைன் வடக்கு தெருவில் உள்ள பொன் மாரியம்மன் திருவிழாவுக்கு நேற்று முன்தினம் சென்றார்.
அங்கு இரவு, 12:30 மணிக்கு, ஹரிராமிடம், 3 பேர் கத்தியை காட்டி பணம் கேட்டனர். அவர் தராததால், கத்தியால் ஹரிராமின் காதை வெட்டிவிட்டு, 3 பேரும் தப்பினர். அங்கிருந்தவர்கள், ஹரிராமை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்ததில், பாண்டியன் தெரு மாதவன், 23, சிவா, 24, விக்னேஷ், 24, ஆகியோர் என தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.