நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்:தலைவாசல்
அருகே லத்துவாடியை சேர்ந்த லட்சுமணன் மகள் மகேஸ்வரி, 19. சேலத்தில்
உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., நர்சிங், 2ம் ஆண்டு படிக்கிறார்.
தீபாவளி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த மாணவி, கடந்த, 3ல் மீண்டும்
கல்லுாரி சென்றார். 4ல் கல்லுாரிக்கு மாணவி வரவில்லை என, அவரது
பெற்றோருக்கு தகவல் அளித்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால்,
வீரகனுார் போலீசில் லட்சுமணன் புகார் அளித்தனர். விசாரணையில்
பெற்றோர் திட்டியதால், சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் மாணவி
இருந்தது தெரிந்தது. நேற்று மாணவியை மீட்ட போலீசார், அவரது
பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

