/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடன் வாங்கி செலுத்தாமல் மோசடி ஓய்வு ஆசிரியருக்கு 3 மாத சிறை
/
கடன் வாங்கி செலுத்தாமல் மோசடி ஓய்வு ஆசிரியருக்கு 3 மாத சிறை
கடன் வாங்கி செலுத்தாமல் மோசடி ஓய்வு ஆசிரியருக்கு 3 மாத சிறை
கடன் வாங்கி செலுத்தாமல் மோசடி ஓய்வு ஆசிரியருக்கு 3 மாத சிறை
ADDED : பிப் 07, 2025 04:06 AM
சேலம்: புதுக்கோட்டை, திருகோகர்ணம், வைரம் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் சதாசிவம், 73. இவருக்கும், சேலம், பிரகாசம் நகரை சேர்ந்த சவுந்தரராஜன், 66, என்பவருக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் சதாசிவம், கடன் கேட்டுள்ளார். அதன்படி, 2019 முதல், 2020 வரை, சவுந்தரராஜன், அவரது மனைவி, மகன் வங்கி கணக்குகளில் இருந்து, பல தவணைக-ளாக, 29.50 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். பின் சதாசிவம், வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த, 40 லட்சம் ரூபாய்க்கு, 5 காசோலைகள் கொடுத்த நிலையில், வங்கி கணக்கில் பணமின்றி திரும்பியது. பலமுறை அவகாசம் வழங்கியும், பணம் தராததால், அவர் மீது, சேலம் ஜே.எம்.எண்: 1ல் மோசடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சதாசிவத்துக்கு, 3 மாத சிறை தண்டனை, காசோலை தொகை, 40 லட்சம் ரூபாயை, 3 மாதங்களில் செலுத்த வேண்டும் என, மாஜிஸ்திரேட் திருமால் நேற்று உத்தர-விட்டார்.