ADDED : ஜூலை 02, 2026 01:29 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தாசில்தார் பார்த்தசாரதி தலைமை வகித்து, அதன் வளாகத்தில் சங்கக்கொடியை ஏற்-றினார். தொடர்ந்து வருவாய்த்துறையினருக்கு வாழ்த்து தெரி-வித்து, அத்துறை சார்பில் மக்களுக்கு அளிக்கப்படும் சேவை குறித்து பேசினார்.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் புருேஷாத்தமன், ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் நீதி-செல்வம், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.அதேபோல் சங்ககிரி வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு சார்பில் அங்குள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்க கொடியை, தாசில்தார் கோமதி ஏற்றி அனைவ-ருக்கும் இனிப்பு வழங்கினார்.
