/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
/
சேலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
சேலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
சேலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
ADDED : செப் 30, 2025 02:24 AM
சேலம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில், 500க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாட்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் அர்த்தனாரி கூறுகையில், ''உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது, விசாரிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வருவாய், நில அளவை, பேரிடர் மேலாண்மைத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்.,25ல் மாநிலம் முழுவதும் தாலுகா அலுவலங்களில் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக நேற்று, இன்று இரண்டு நாட்கள் வருவாய்த்துறை அலுவலர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுகின்றனர்,'' என்றார்.