10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2026 05:07 AM

அ நிறம் | அளவு
சேலம்:தமிழ்நாடு
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை, 5:45 மணிக்கு,
ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை வகித்து பேசியதாவது:
காலியாக
உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை உடனே நிரப்புதல்; சட்டசபை
தேர்தல் பணியின்போது வருவாய்த்துறையினர் மேற்கொண்ட செலவின
தொகையை, தேர்தல் கமிஷன் உடனே விடுவித்தல்; சிப்காட், விமான நிலையம்,
ரயில்வே, முத்திரை கட்டண அலுவலகம் உள்ளிட்ட சிறப்பு திட்ட அலுவலக
ஊழியர்களுக்கு, தாமதமின்றி சம்பளம் வழங்குதல் உள்பட, 10
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட செயலர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் அகிலன் உள்ளிட்ட நிர்வாகிகள், வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
