/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாய்க்காலில் அடைப்பால் நெற்பயிர் கருகும் அபாயம்
/
வாய்க்காலில் அடைப்பால் நெற்பயிர் கருகும் அபாயம்
ADDED : டிச 12, 2024 12:57 AM
வீரபாண்டி,
வீரபாண்டி, இனாம் பைரோஜி ஊராட்சியில், சேலத்தில் இருந்து வரும் திருமணிமுத்தாறு நீரை தேக்கி வைக்க, பழமையான தடுப்பணை உள்ளது. அதில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்கள் வழியே செல்லும் தண்ணீர், சென்னகிரி, எஸ்.பாப்பாரப்பட்டி ஏரிகளை நிரப்பிய பின் மீண்டும் ஆற்றில் கலக்கும். கிளை வாய்க்கால் செல்லும் வழியின் இருபுறமும், இந்த நீரை நம்பி, 100க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது.
திருமணிமுத்தாற்றில் இருந்து தண்ணீர் வருவதால் ஆண்டு முழுதும் கிளை வாய்க்கால்களில், நீர் வந்து கொண்டே இருக்கும். 10 நாட்களுக்கு முன் திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சக்கைகள், தடுப்பணையை தாண்டி கிளை வாய்க்கால்களில் தேங்கி அடைத்துள்ளன. இதனால் ஏரிகளுக்கு நீர் செல்வது தடைபட்டு, அதை நம்பி பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதி ஆறு, கால்வாய்கள் பராமரிப்பு, நாமக்கல் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறி, 3 நாளாகியும் பலனில்லை. இதனால் அடைப்பு சரிசெய்யப்படாமல் வாய்க்கால் நீரின்றி காய்ந்து, பயிர்களும் கருகும் ஆபத்து உள்ளது.
அதிகாரிகள் விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து, கிளை வாய்க்காலில் அடைத்துள்ள சக்கை உள்ளிட்ட கழிவை அகற்றி சுத்தம் செய்ய, விவசாயிகள் வலியுறுத்தினர்.

