/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் கேட்டு சாலை மறியல் கடும் போக்குவரத்து பாதிப்பு
/
குடிநீர் கேட்டு சாலை மறியல் கடும் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு சாலை மறியல் கடும் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு சாலை மறியல் கடும் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 10, 2024 01:59 AM
குடிநீர் கேட்டு சாலை மறியல்
கடும் போக்குவரத்து பாதிப்பு
சேலம், டிச. 10-------
சேலம், பொன்னம்மாபேட்டை அருகே உள்ள அண்ணா நகர், நான்காவது தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இந்தநிலையில், நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொன்னம்மாபேட்டையில் இருந்து, வீராணம் செல்லும் சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்மாபேட்டை போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டு உள்ளது. குடிநீரை விலைக்கு வாங்கி வருகிறோம். அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்து, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

