ADDED : நவ 27, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சி, அண்ணாபுரத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் சில மாதங்களாக சீரான அளவில் குடிநீர் வினியோகிப்பதில்லை எனக்கூறி, ஏராளமான பெண்கள் உள்ளிட்ட மக்கள், நேற்று காலை, 9:00 மணிக்கு, கெங்கவல்லி - வீரகனுார் சாலையில், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில பெண்கள், சாலை
யில் படுத்தபடி கோஷம் எழுப்பினர். கெங்கவல்லி போலீசார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பேச்சு நடத்தினர். அப்போது அலுவலர்கள், 'சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர். இதனால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

