/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை பணியில் தொய்வு ஜல்லி கற்களால் அவதி
/
சாலை பணியில் தொய்வு ஜல்லி கற்களால் அவதி
ADDED : டிச 14, 2024 01:21 AM
பனமரத்துப்பட்டி, டிச. 14-
பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 11வது வார்டில் குறும்பர் தெரு, பால் கூட்டுறவு சங்கம், மின் வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள சாலை புதுப்பிக்கும் பணி, 3 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
பழைய தார்ச்சாலையில் இருந்த ஜல்லி கற்கள் தோண்டி எடுத்து பரப்பி விட்டனர். பின் சாலை பணி நடக்கவில்லை. ஜல்லி கற்களில் நடந்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். கூர்மையான ஜல்லிகளால் சைக்கிள், பைக் டயர்கள் பஞ்சராகி, வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக மின்வாரியம், பால் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களுக்கு வரும் மக்கள்
அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து அலுவலர்களிடம் கேட்டபோது, 'மழைக்காலம் முடிந்த பின் சாலை பணி தொடங்கும்' என்றனர்.
இதேநிலை தொடர, சேலம் டவுன் மகளிர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. என்னையும், குழந்தைகளையும் கொடுமைப்படுத்தும் கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

