ADDED : செப் 21, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: சேலம் - ஆத்துார் தேசிய நெடுஞ்சாலையில் மின்னாம்பள்ளியில் இருந்து செல்லியம்பாளையம் செல்லும் சாலை, ஒரு வழித்தட-மாக உள்ளது.
அச்சாலையில் இரு வாகனங்கள் எதிரெதிரே வரும்-போது ஒதுங்க கூட வழியில்லை. இச்சாலையை அகலப்படுத்த, வாழப்பாடி நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். இதற்கு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தில், 2.87 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டது. நேற்று முன்தினம், இப்பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை கணக்கெடுத்-தனர். மேலும் சாலையோர
ஆக்கிரமிப்புகளை அகற்ற, நில அள-வையரால் எல்லை வரையறை பணி மேற்கொள்வதற்கான நடவ-டிக்கையை, நெடுஞ்சாலைத்துறையினர்
மேற்கொண்டுள்ளனர்.