ADDED : டிச 28, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ்நாடு அரசு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். அதில் சேத-மான சாலைகளில், 'பேட்ஜ்ஒர்க்' செய்ய நவீன இயந்திரம் வழங்-குதல்; இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளால் காலி பணி-யிடத்தை நிரப்புதல்; நிறுத்தி வைத்துள்ள சரண்டர் விடுப்பு ஒப்ப-டைப்பு பணப்பலன்கள் வழங்குதல்; நீதிமன்ற தீர்ப்பின்படி, 41 மாத கால பணி நீக்கத்தை, பணி காலமாக அமல்படுத்தல் உள்-பட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். மழையிலும் கோஷம் எழுப்பி, திரளானோர் பங்கேற்றனர்.

