ADDED : அக் 11, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.
அதில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, 41- மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்; நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என வலியுறுத்தி, கண், காதுகள், வாயை பொத்தி, மவுன புரட்சி போராட்டம் நடத்தினர்.
கோட்ட செயலர் கலைவாணன் அந்தோணி உள்பட பலர் பங்கேற்றனர்.