சாலையோர குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
சாலையோர குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
ADDED : ஜூன் 04, 2026 04:42 AM

அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி; சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், தாசநா-யக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி பிரிவு ஆகிய இடங்-களில் மழை நீர் ஓடையில் குப்பை கொட்டுகின்-றனர். பிளாஸ்டிக், மருத்துவ கழிவு உள்ள நிலையில், அந்த குப்பைக்கு தீ வைத்து எரிக்கின்-றனர்.
புகையால், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. விபத்து அபாயமும் நிலவுகிறது.
தவிர துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தவிர ஓடையில் குப்பையை கொட்டி மூடுவதால் மழை காலங்களில் நெடுஞ்-சாலையில் தண்ணீர் தேங்கும் அவலம் உள்ளது.இதுகுறித்து பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிகா-ரிகள் கூறுகையில், 'மாநகர் பகுதியில் இரவில் வாகனத்தில் குப்பையை ஏற்றி வந்து, இங்குள்ள ஓடையில் கொட்டுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
