/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலமலையில் மழையால் சரிந்த பாறை கற்கள் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
/
பாலமலையில் மழையால் சரிந்த பாறை கற்கள் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
பாலமலையில் மழையால் சரிந்த பாறை கற்கள் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
பாலமலையில் மழையால் சரிந்த பாறை கற்கள் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 16, 2025 02:10 AM
மேட்டூர், மழையால் பாறைக்கற்கள் சரிந்ததால், 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொளத்துார், பாலமலை ஊராட்சி, கடல் மட்டத்தில் இருந்து, 3,000 அடிக்கு மேல் உள்ளது. மலையில், 33 கிராமங்களில், 4,000க்கும் மேற்பட்ட மலையாளி இன மக்கள் வசிக்கின்றனர். அதில், 20 கிராமங்களுக்கு, அடிவாரத்தில் உள்ள கண்ணாமூச்சி கிராமத்தில் இருந்து, 7.30 கி.மீ., மலையில் உள்ள மண் சாலையில், ஜீப், இருசக்கர வாகனங்களில், புல்லாம்பட்டி சென்று, அங்கிருந்து பிற கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
சில நாட்களாக மேட்டூர் சுற்றுப்பகுதியில், இரவில் பரவலாக கன மழை பெய்தது. இதில் பால
மலைக்கு செல்லும் மண்சாலையில், பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டது. நேற்று அதிகாலை மலைக்கு செல்லும், 4வது வளைவில், அருகே உள்ள குன்றுகளில் இருந்து பாறை கற்கள் பெயர்ந்து, மண் சாலையில் விழுந்தது. இதனால் பாலமலைக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
காலையில், மக்கள், வாகனங்களில் அடிவார கிராமங்களுக்கும், அடிவாரத்தில் இருந்து மலை கிராமங்களுக்கும் செல்ல முடியவில்லை. தவிர பாலமலையில், 5 துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலை, ஒரு உயர்நிலை பள்ளிகள் உள்ளன. அதில் ராமன்பட்டியில் உள்ள உறைவிட பள்ளி, பெரியகுளம் அரசு துவக்கப்பள்ளி தவிர்த்து, இதர பள்ளிகளுக்கு, அடிவார கிராமங்களில் இருந்து, பெரும்பாலான ஆசிரியர்களும் செல்ல முடியவில்லை. பாறைகளை அகற்றும் பணி, வருவாய்த்துறை மூலம் மதியம் தொடங்கியது. பின் மாலையில் போக்குவரத்து தொடங்கியது.
'விரைவில் சீரமைப்பு'
ஏற்காட்டில் உள்ள பாறைக்கடை மலைக்கிராமத்தில் தார்ச்சாலை, மழையால் சீரழிந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து ஒன்றிய பி.டி.ஓ.,
பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, விரைவில் சாலையை சீரமைப்பதாக, மக்களிடம் தெரிவித்தனர்.
வாகன ஓட்டிகள் அவதி
ஆத்துார், அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, இரவில் கன மழை பெய்தது. இதனால் நேற்று, நரசிங்கபுரம் வாரச்சந்தை வழியே செல்லும் பழனியாபுரி சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. நரசிங்கபுரம், குறிஞ்சி நகர் பகுதியில் ரயில்வே மேம்பால பணி நடப்பதால், நரசிங்கபுரம் சந்தை வழியேதான் வாகனங்கள் சென்று வருகின்றன. அங்கு மழை நீர் அதிகளவில் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மழைநீர் தேங்காதபடி, வடிகால் வசதி அமைக்க, மக்கள் வலியுறுத்தினர்.
ஆத்துார், கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார
பகுதிகளில் நேற்று காலை முதல், சாரல் மழை பெய்தது. மாலை, 5:00 மணிக்கு மேல், கெங்கவல்லி, நடுவலுார், தெடாவூர், ஒதியத்துார், கூடமலை பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு நாட்களாக மழையால், விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சங்ககிரியில் கனமழை
சங்ககிரி நகரில், 2ம் நாளாக நேற்று மாலை கனமழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இரவிலும் மழை விட்டு விட்டு பெய்தது. மாலையில் பெய்த மழையால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் வீடு திரும்ப சிரமப்பட்டனர்.