ADDED : மார் 09, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், நங்கவள்ளி
சின்னசோரகையை சேர்ந்தவர் அருள்ராஜ், 27, கூலித்தொழிலாளி. இவரது
மனைவி கோகிலா, 25. இரண்டு குழந்தைகளுடன் சாலை வீட்டில் வசித்து
வருகின்றனர். நேற்று மாலை, 5:00 மணிக்கு கோகிலா வீட்டில் இருந்த போது,
வீட்டில் புகை கிளம்பியுள்ளது. பின் குழந்தைகளுடன் கோகிலா வீட்டை
விட்டு வெளியே வந்துள்ளார். கூரை முழுவதும் தீயினால் கொளுந்து விட்டு
எரியத்துவங்கியது.
நங்கவள்ளி தீயணைப்பு வீரர்கள் தீயை
கட்டுப்படுத்தினர். இதில் பள்ளி சான்றிதழ், லேப்டாப் உள்ளிட்ட
பொருள்கள் சேதமானது. மின்சசிவு காரணமாக தீ விபத்து
ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

