ADDED : ஜன 07, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் அருகே காளிகவுண்டர் காட்டை சேர்ந்-தவர் மும்தாஜ், 55. இவர் நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டி-ருந்தார். அப்போது அங்கு வந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ், 'என் தாயிடம் வாங்கிய கடனை கொடுங்கள்' என, மும்தாஜிடம் கேட்டார். தொடர்ந்து தகாத வார்த்தைகளில் திட்டி-யதோடு, கையால் அவரை தாக்கினார். இதை தட்டிக்கேட்ட மும்-தாஜின் கணவரையும் தாக்கினார்.
படுகாயம் அடைந்த மும்தாஜ், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்ததில், விக்னேஷ், 26, ரவுடி என தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
