ADDED : ஜூலை 04, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், தாதகாப்பட்டி, எஸ்.வி.ஆர்., காலனியை சேர்ந்த ரவுடி சுரேஷ், 35. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து, 2025ல், அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்தார்.
அந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வரு-கிறது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடி-வாரன்ட் பிறப்பித்து உத்ரவிட்டது. அவரை, அன்-னதானப்பட்டி போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்துள்ளார். இதை அறிந்து அங்கு சென்ற போலீசார், சுரே ைஷ சுற்றி வளைத்து கைது செய்தனர்.
