ADDED : டிச 27, 2024 07:43 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள பாத்திர கடையில், இரவு காவலாளியாக ராஜவடிவேல், 60, என்பவர் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, டிராவில், 10,000 ரூபாயை வைத்துள்ளார். பின் துாங்கிய அவர், அதிகாலை விழித்து பார்த்தபோது, பணம் இல்லை.
'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர், பணத்தை திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
