தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.20 கட்டண தரிசனத்தை அமல்படுத்த வலியு-றுத்தல்

ரூ.20 கட்டண தரிசனத்தை அமல்படுத்த வலியு-றுத்தல்

ரூ.20 கட்டண தரிசனத்தை அமல்படுத்த வலியு-றுத்தல்


ADDED : செப் 25, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்; காடையாம்பட்டி தாலுகா காருவள்ளி சின்னதி-ருப்பதி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புரட்-டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வழிபடுவர். அங்கு இலவச தரிசனம், 20 ரூபாய் கட்டண தரிசனம், 100 ரூபாய் விரைவு தரிசனம் என, பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

இதனால் நடுத்தர மக்கள், 20 ரூபாய் கட்டணத்தை பயன்ப-டுத்தி தரிசனம் செய்தனர். ஆனால் கடந்த சனி முதல், 20 ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்து விட்டனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'ஒரு குடும்-பத்தை சேர்ந்த, 5 பேர், 20 ரூபாய் கட்டணம் மூலம், 100 ரூபாய் செலுத்தி தரிசனம் செய்ய முடியும், ஆனால், 500 ரூபாய் செலுத்துவது சிரமம். வசதியானவர்கள் மட்டுமே விரைவு தரி-சன வழியை பயன்படுத்த முடியும். அதனால், 20 ரூபாய் கட்டண தரிசனத்தை மீண்டும் அமல்ப-டுத்த வேண்டும்' என்றனர்.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் நைனா-குமார் கூறுகையில், ''20, 100 ரூபாய் வரிசையில் வரக்கூடிய கூட்டம், கோவிலுக்குள் வரும்போது ஒரே இடத்தில் சந்திப்பதால் தள்ளுமுள்ளு ஏற்ப-டுகிறது. அதனால், 20 ரூபாய் வரிசை நிறுத்தப்-பட்டுள்ளது,'' என்றார்.

சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரத்னவேல் பாண்டியனிடம் கேட்ட-போது, ''ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்-படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us