/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் கவரில் இருந்தரூ.2.50 லட்சம் திருட்டு
/
பைக் கவரில் இருந்தரூ.2.50 லட்சம் திருட்டு
ADDED : மே 04, 2025 01:33 AM
ஆத்துார்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கருப்பன்சோலையை சேர்ந்தவர் பாலாஜி, 46. விவசாயியான இவர், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று, சேமிப்பு கணக்கில் இருந்த, 4 லட்சம் ரூபாயை எடுத்து, அவரது பைக் டேங்க் கவரில் வைத்தார்.
தொடர்ந்து அருகே இருந்த பூச்சிக்கொல்லி மருந்து கடைக்கு சென்றார். பின் பாலாஜி, அவர் வைத்திருந்த பணத்தை எடுத்து பார்த்தபோது குறைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலாஜி புகார்படி, தம்மம்பட்டி போலீசார், அங்கு கடை பகுதியில் இருந்த'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மற்றொரு பைக்கில் வந்த இருவர், 2.50 லட்சம் ரூபாயை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.