ADDED : நவ 02, 2024 04:27 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, நாட்டாண்மை கட்டடத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.
இதில், மேலாண் இயக்குனரான பாரதி, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ஓமலுார் கருப்பூர் இந்திரா நகர் 5 வது வார்டு பகுதியை சேர்ந்-தவர் சடையன் மகன் பச்சியப்பன், 37. இவர், ஓமலுாரில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில், கிளை மேலா-ளராக, 2016 செப்.,7 முதல், 2021 வரை பணியாற்றி வந்த போது, உறுப்பினர்களுக்கு தெரியாமல் அவர்களது சேமிப்பு கணக்குகளில் இருந்து, போலியான ஆவணங்கள் தயாரித்து, 26 லட்சத்து, 37 ஆயிரத்து, 513 ரூபாய் கையாடல் செய்துள்ளார். இவருக்கு உடந்தையாக சங்க கணக்காளர் சத்தியா என்பவரும் முறைகேடில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.இதையடுத்து எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு துணை
எஸ்.பி., முனியசாமி விசாரணை நடத்தினார். அதில், பச்சி-யப்பன் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சத்தி-யாவை போலீசார் தேடி வருகின்றனர்.
