ADDED : ஜூலை 19, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சூரமங்கலம், முல்லை நகரை சேர்ந்த, மருத்துவர் செந்தில்ராகவன், 41. இவர் குரங்குச்சாவடி, ஸ்ரீநகர் காலனியில் கிளினிக் வைத்துள்ளார். கடந்த, 15 இரவு, கிளினிக்கை பூட்டிச்சென்றார். மறுநாள் காலை வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கரில் இருந்த, 50,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.