தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆடு வியாபாரியிடம் ரூ.57,000 பறிமுதல்

ஆடு வியாபாரியிடம் ரூ.57,000 பறிமுதல்

ஆடு வியாபாரியிடம் ரூ.57,000 பறிமுதல்


ADDED : ஏப் 14, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம் தெற்கு சட்டசபை தொகுதி, நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் லட்சுமி தலைமையில், சீலநாயக்கன்பட்டி சோதனைச்சாவடி அருகே, நேற்று காலை, 5:18 மணிக்கு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த, ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டத்தில், 57,000 ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், வேனை ஒட்டி வந்தவர் சேலம், மல்லுாரை சேர்ந்த கலியன் வலசு சரவணன், 50, என்பதும், ஆடு மொத்த வியாபாரம் செய்வதாகவும், ஆடு வாங்க சந்தைக்கு செல்வதாக கூறினார். ஆனால், அவரிடம் பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லை. அதையடுத்து, 57,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us