/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் டிக்கெட் பரிசோதனை ரூ.48.61 லட்சம் அபராதம் வசூல்
/
ரயிலில் டிக்கெட் பரிசோதனை ரூ.48.61 லட்சம் அபராதம் வசூல்
ரயிலில் டிக்கெட் பரிசோதனை ரூ.48.61 லட்சம் அபராதம் வசூல்
ரயிலில் டிக்கெட் பரிசோதனை ரூ.48.61 லட்சம் அபராதம் வசூல்
ADDED : அக் 18, 2024 07:21 AM
சேலம்: சேலம் கோட்ட ரயில்களில், நடத்திய சிறப்பு டிக் கெட் பரிசோதனையின் போது, பயணிகளிடம் இருந்து, 48.61 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் கடந்த, 1 முதல் 15 வரை ரயில்களில் சிறப்பு டிக்கெட் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்கள், முறையற்ற பயணம் செய்வது, முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. பின் அதற்கேற்ப அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த, 4,059 பேரிடம் இருந்து, 31 லட்சத்து, 25 ஆயிரத்து, 485 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. முறைகேடான பயணம் செய்த, 4,287 பேரிடம், 17 லட்சத்து, 14 ஆயிரத்து, 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதேபோல் முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ் எடுத்து சென்றது தொடர்பாக, 44 பேரிடம், 21 ஆயிரத்து, 270 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தமாக, 8,390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பயணிகளிடமிருந்து, 48 லட்சத்து, 61 ஆயிரத்து, 55 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது என, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.