/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்.டி.ஓ., ஆபீஸில் செயல்படாத 'ஆப்' ; காத்துக்கிடந்த வாகன உரிமையாளர்கள்

ADDED : அக் 05, 2024 06:55 AM
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சரக்கு லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெற, உரிமையாளர்கள் வந்திருந்தனர். இதற்கு வாகனங்களை புகைப்படம் எடுத்து கணினியில் பதிவேற்ற வேண்டும். ஆனால், புகைப்படம் பதிவு செய்யும் கணினி செயலியில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் உரிமையாளர்கள் இரு நாட்களாக, 40க்கும் மேற்பட்ட வாகனங்களை, மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதேநிலை மாநிலத்தில் பரவலாக நிலவியதாகவும் தெரிவித்தனகர். ஒரு வழியாக நேற்று மதியம் முதல், செயலி செயல்பட தொடங்கியதால், வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இரு நாட்களாக காத்துக்கிடந்த உரிமையாளர்கள், வாகனங்களுடன் கிளம்பி சென்றனர்.