/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசுக்கு எதிராக போராட ஊரக வளர்ச்சித்துறை முடிவு
/
அரசுக்கு எதிராக போராட ஊரக வளர்ச்சித்துறை முடிவு
ADDED : டிச 29, 2024 12:47 AM
சேலம், டிச. 29-
சேலம், கோட்டை பல்நோக்கு அரங்கத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க, 7வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகித்தார். கலெக்டர் பிருந்தாதேவி பேசினார்.
தொடர்ந்து பணி நெருக்கடி, அனைத்து நிலைகளில் இடமாறுதலை கண்டித்து, ஜன., 3ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிதல், 10ல் வெளிநடப்பு, 23ல் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தல்; ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல்; கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்தல் என்பன உள்பட, 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இணை செயலராக முருகன், தணிக்கையாளர்களாக பெருமாள், லோகநாதன், ரகுராமன் நியமனம் செய்யப்பட்டனர். மாநில தலைவர் திருவேரங்கன், செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.