ADDED : ஆக 07, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
சேலம்:தமிழ்நாடு
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், சேலம் ஒன்றிய அலுவலகம்
முன், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று
நடந்தது. மாவட்ட பொருளாளர் வடிவேல் தலைமை வகித்தார்.
அதில் உதவி
இயக்குனர் பதவி உயர்வு ஆணைகளை உடனே வழங்குதல்; நீண்ட நாட்களாக
காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புதல் என்பன உள்பட, 21
கோரிக்கைகளை நிறைவேற்ற கோஷம் எழுப்பினர். வட்டார செயலர்
திருமுருகன், பொருளாளர் கண்ணன், பி.டி.ஓ., வெங்கடாஜலம்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பனமரத்துப்பட்டி ஒன்றிய
அலுவலகத்தில், வட்டார பொருளாளர் மதன்; ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகம்
முன், மாவட்ட தணிக்கையாளர் பெருமாள்; கடையாம்பட்டி பி.டி.ஓ.,
அலுவலகம் முன், பண்ணப்பட்டி ஊராட்சி செயலர் ஜெயவேல் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
